Monday, September 16, 2013

சித்த மருத்துவம்


சித்த மருத்துவம் தமிழ் மண்ணில் தோன்றிய திராவிடப் பாரம்பரியத்தின் நாகரீகம், பண்பாடு, கலை,ஞானம் போன்றவற்றில் வேரூன்றி தமிழர்களின் உணர்வில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்ற மருத்துவம்சித்த மருத்துவம் ஆகும்.

ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள், திருமந்திரம் போன்றநூல்களிலும் கி.மு 4500 லிருந்து 1600 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட ரிக் வேத நூல்களிலும்சரபேந்திரர் சித்த மருத்துவச்சுடர் என்னும் ஏட்டுச் சுவடிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் சங்ககால தமிழ்இலக்கியங்களிலும் சித்த மருத்துவம் பற்றிய ஆதாரங்கள் இருப்பதைகாண முடிகிறது. இவ்வாதாரங்களைஅறிஞர் பெருமக்கள் பலரும் பல் வேறு நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறிப்பாக மேலைநாட்டு நாகரீகம் தோன்றுவதற்கு பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்அதாவது துலாபாரயுகம்இரணடாயிரத்து ஒன்பதுக்கு (நூந்று தொன்னூற்று ஐந்து கோடியே ஐம்பத்து நூறாயிரத்து ஏழுபத்து மூன்று)முன் தன்னிகரில்லா சித்த மருத்துவம் தோன்றியதாக வரையறுக்கப் பட்டுள்ளது. சித்த மருத்துவமானதுதிராவிடர் மருத்துவம், தமிழர் மருத்துவம், செந்தமிழ் மருத்துவம் என பல்வேறு பெயர்களில்அழைக்கப்படுகிறது.
வரலாற்று வல்லுநர்களின் கூற்றுப்படி உலகிலுள்ள அனைத்து பிரிவினர்களிலும் முந்தியவர்களாகவிளங்குகின்ற திராவிடர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் திராவிடர் மருத்துவம் எனஅழைக்கப்படுகிறது.

மனித உயிரினம் முதன் முதலில் தோன்றிய இடமான குமரிக்கண்டம் தான் தமிழர்களின் தாயகம் என்பதுவரலாற்று உண்மை. இத்தொல்குடி மக்களாகிய தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் தமிழர்மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது .

உலக மொழிகளில் முதன் முதலில் செம்மையுள்ள மொழி தமிழ் மொழி ஆகும். சித்தர்கள் உடலுக்கும்,உள்ளத்திற்கும் நன்மை செய்கின்ற சித்தமருத்துவத்தை பாடல் உருவிலும் மக்கள் நன்கறிந்தசெந்தமிழிலும் வழங்கியதால் இம்மருத்துவம் செந்தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது.

உலக உயிரினங்களின் இன்னல்களை நீக்க அயராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெளிந்து ஆயக்கலைகள்அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்த இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும், உள்ளநலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற ஒரு மருத்துவ முறையைத்தந்தவர்கள் சித்தர்கள் என்பதால் இது சித்த மருத்துவம் என்று கூறப்படுகின்றது.

உலக மருத்துவ முறைகளுக்கெல்லாம் மூல மருத்துவமாகவும், மரபு வழி மருத்துவத்திற்கு மணிமகுடமாகவும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன்தோன்றி ய மூத்த குடி மக்களாகியஆதிகாலத்தில் வாழ்ந்த திராவிடர்களின் சொந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம் என்பதில் எவர்க்கும் ஐயமில்லை.

No comments:

Post a Comment