Tuesday, September 10, 2013

ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட கால்வாசி ஆண்கள்


ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட கால்வாசி ஆண்கள் ஏதோ ஒரு வகையில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐ.நா மேற்கொண்ட இப்புள்ளிவிபரத்தில், ஆசியாவின் முக்கிய ஆறு நாடுகளின் 10,000 ஆடவர்களிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  உங்களது வாழ்க்கைத் துணையாக இருந்தாலும், அவர் அனுமதியின்றி வல்லுறவில் ஈடுபட்டுள்ளீர்களா? குடிபோதையில் உள்ள எந்தப் பெண்ணிடமாவது, அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளீர்களா போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இதன் படி ஆசிய நாடுகளில் 10 ஒரு ஆடவர் தனது மனைவி அல்லாத வேறொரு பெண்ணிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதாக இப்புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.  பதில் அளித்தவர்களின் படி பபுவா நியூகினியாவில் 10 இல் ஆறு பேர்  கட்டாயப்படுத்தி பெண்களுடன் வல்லுறவில் ஈடுபடுவதாகவும், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பத்து பேரில் ஒருவர் இவ்வாறு முறைகேடான பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதாகவும் அப்புள்ளிவிபரம் கூறுகிறது.
கம்போடியா, சீனா, இந்தோனேசியாவில் ஐந்து பேரில் இவ்வாறூ முறைகேடான பாலியல் வல்லுறவில் ஈடுபட்கிறார்.  பாலியல் உறவில் உள்ள இச்சை, மகிழ்ச்சி, குடிபோதை, கோபம், பழிவாங்குதல் என்பன பாலியல் வல்லுறவுக்கான காரணங்களாக இவர்கள் முன்வைத்துள்ளனர் என்கிறது அப்புள்ளிவிபரம்.

No comments:

Post a Comment