Monday, September 9, 2013

எழுதத்தெரிந்தவன் எல்லாம் எழுத்தாளன் அல்ல.


(வாசித்தபின் நண்பர்களுக்கும் பகிரவும்) 

எழுதத்தெரிந்தவன் எல்லாம் எழுத்தாளன் அல்ல.
பேசத்தெரிந்தவன் எல்லாம் பேச்சாளன் அல்ல.
நடிக்கத்தெரிந்தவன் எல்லாம் நடிகனும் அல்ல.
ஆனால் சுயபுத்தியோ சொல்புத்தியோ இல்லாத பெரும்பாலானோர் இன்று அரசியல்வா(வியா)திகள்.

இவ்வாறு நான் கூறிய காரணம் நேற்று இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரமே. விடயமே அறியாத சில ஈனப்பிறவிகள் முகநூல் வழியாக இனவாத மற்றும் மதரீதியான துவேஷ கருத்துக்களை வெளியிட்டு அரசியல் பன்னாடைகள் செய்யும சதிகளுக்கு ஒத்து ஊதுகிறார்கள். மீண்டும் அங்கு குஜராத் கலவரம் போன்றதொரு கலவரமே நேற்று இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. நாட்டில் எது எதுவெல்லாம் நடக்கக்கூடாதோ அதுதான் இன்று நடக்கிறது.

இந்திய நாட்டிலும் சரி இலங்கை நாட்டிலும் சரி அந்நாட்டு பிரஜைக்குரிய உரிமை என்ற ஒன்று இருக்கிறது. அதை புறக்கணிக்கவோ தீவிரவாதி அல்லது மதவாதி என்று யாரையும் அனாவசியமாக எதிர்க்க எந்த ***க்கும் தகுதி இல்லை.

ஆனால் இன்று நடப்பது என்னவோ மதரீதியான பிரச்சனைகளை தோற்றுவித்து அதில் குளிர்காயும் அரசியல் பன்னாடைகள்தான் நீதித் துறையும் விசாரணைக்கமிட்டியும். இது என்று மாறப்போகிறது?

அரசியல்வாதிகளே ஒன்றைமட்டும் தெரிந்து கொள்ளுங்கள், மதப்பிரச்சினைகளை தூண்டிவிட்டு அதற்கு நீங்களே விசாரணையும் செய்து நீங்களே தீர்ப்பு வழங்கும் செயற்பாடு உங்களை பயங்கரமான அழிவிற்கு இட்டுச்செல்லும். உங்களுக்கும் குடும்பம், சந்ததி என்று இருக்கிறது.

வெளிப்படையாகக்கூறின் இந்தியாவில் ஜெயலலிதாவும் சரி மோடியும் சரி, இலங்கையில் மஹிந்தரும் சரி ர.ஹக்கீம் உம் சரி எல்லாமே சந்தர்ப்பவாதிகள். வெறும் பணம் பதவிக்கு அலையும் கும்பல்.

இதை எல்லாம் விட கொடுமை என்னவெனில் தான் சார்ந்த மதம் என்று வருகிறபோது இந்துக்களும் சரி,முஸ்லிம்களும் சரி,கிறிஸ்தவர்களும் சரி உண்மை எது என்பதை ஆராயாமல் வெறும் மீடியாவின் செய்தியை அல்லது வதந்தியை நம்பி பிற சமூகத்தை அல்லது மாற்றானை தூற்றிப்பேசுவதும் மதங்களை கொச்சைப்படுத்துவதும் தொடரும் செயற்பாடாகவே உள்ளது. இதற்கு சில முகநூல் பக்கங்கள் வேறு சப்போர்ட்டு.

மனம் கொதிக்கிறது. இன்றைய ஒவ்வொரு இனவாத செயற்பாடுகளிலும் சரி கலவரங்களிலும் சரி மனிதனுடன் சேர்ந்து மனிதாபிமானமும் மரணிக்கிறதே 

No comments:

Post a Comment