Tuesday, September 3, 2013

பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய்


பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலைமை, தற்போது 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.

மகளிர் கல்வியில் 100% பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. ஆரம்பக் கல்வி முடித்தவுடன் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது (Drop-out rate) 40%-லிருந்து 2%-மாக குறைந்துள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே உள்ள குஜராத் மாநிலம், தொழில்துறையில் 16% உற்பத்தியும், 16% முதலீடும், 15% ஏற்றுமதியும், 30% சந்தை ஆக்கிரமிப்பும் செய்கிறது

No comments:

Post a Comment