Sunday, September 1, 2013

யார் சிறந்த இந்தியர்....முதல் படமா அல்லது இரண்டாவது படமா...


யார் சிறந்த இந்தியர்....முதல் படமா
அல்லது இரண்டாவது படமா...

கார்பரேட் ஊடகங்களின் கருத்தின் படி 25 ஆண்டுகளில் சிறந்த இந்தியர் பட்டியலில் முதலிடம் ரஜினி அவர்களுக்கு கிடைத்துள்ளது..இவர் அப்படி என்ன சாதனை செய்துள்ளார் என்று தான தெரியவில்லை..சரி கதைக்கு வருவோம்..

1,முதல் படத்தில் இருப்பவரின் பெயர் சாதவ் பயேங்க் (Jadav Payeng) ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரம்மபுத்திரா நதி அருகே தனி ஒரு மனிதராக ஒரு வனத்தையே உருவாக்கியுள்ளார். அப்பகுதிக்கு இவருடைய செல்லப்பெயரான முலாய் என்பதினை இட்டு, முலாய் வனப்பகுதி என்று அழைக்கின்றனர். இது இந்தியாவிலுள்ள அசாமில், கோகிலாமுக் என்ற இடத்திற்கு அருகே 100 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியாகும். 1979-களின் துவக்கத்தில் ஆரம்பித்த இவருடைய மரம் நடுதல் தற்போது ஐந்து புலி, மூன்று காண்டாமிருகம், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட என்னற்ற விலங்குகளின் வாழ்விடமாக மாற்றியிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மர வகைகளையும் நட்டு வளர்த்துள்ளார். இவருடைய எதிர்காலத் திட்டம் இவ்வனப்பகுதியை உலகின் மிகப்பெரிய நதிக்கரைத் தீவாக மாற்றுவதாகும்.அதுவும் ஒரு ரூபாய் லாபமிலாமல் தனது உடல் உழைப்பின் மூலம் இந்த காட்டை உருவாக்கியுள்ளார்..

2 , இரண்டாவது படத்தில் இருக்கும் நபர் ரஜினி அவர்கள் ..கார்பரேட் ஊடகங்களால் சிறந்த இந்தியர் என்று புகழப்படும் இவர் சினிமா நடிகர் , மக்களை புகைக்கு அடிமையாக்கியத்தை தவிர வேறு எந்த சாதனையை செய்தார் என்று தெரியவில்லை...

நாட்டில் மாசுகளை உண்டாக்கும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகைக்கு முக்கியத்துவம் கொடுத்த ரஜினி சிறந்தவரா அல்லது இன்று உலகில் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தனி ஒரு மனிதராக ஒரு வனத்தையே உருவாக்கிய சாதவ் பயேங்க் சிறந்தவரா...இதில் வேடிக்கை என்னவென்றால் 100 பேர் பட்டியலில் சாதவ் பயேங்க் பெயர் இருப்பதாகவே தெரியவில்லை..மாறாக பெயர்களில் பெரும்பாலும் பணத்தை நோக்கத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் சினிமா , கிரிக்கெட் பிரம்பலங்கள் தான் ...!

No comments:

Post a Comment