Wednesday, August 28, 2013

விமான பயணத்தில் நடந்த ஒரு பரிதாபமான நபரின் துபாய் பயணம்

21.08.2013 அன்று என் விமான பயணத்தில் நடந்த ஒரு பரிதாபமான நபரின் துபாய் பயணம்...

அவர் பெயர் திரு.திலாவர் சையத் ஆபாஜன், XXXXXXயில் உள்ள XXXXXஎனும் கிராமத்தை சேர்ந்தவர். அவரிடம் கீழக்கரையில் உள்ள ரபீக் என்கின்ற போலி எஜெண்ட் ரூ.1 லட்ச ரூபாய் பணம் செலுத்தினால் துபாயில் நல்ல வேலை வாங்கி தருவதாகவும் , சிறப்பான தங்கும் வசதி, மூன்று வேலை சாப்பாடு தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி இவரும் இவருடன் சேர்ந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை சேர்ந்த 15 நபர்கள் பணம் செலுத்தி துபாய் அனுப்ப கோரியுள்ளனர்... அவரும் முழு பணத்தையும் வாங்கி கொண்டு இருமாதம் அலைய விட்டு பின்பு ஒருநாள் அனைவரயும் ஒன்றன் பின் ஒருவாரக துபாய் கிளம்ப ஆயுத்தம்ஆகா சொல்லிருக்கிறார் ..இவரும் ( திலாவர்) அவரின் பேச்சை நம்பி சென்னை ஏர்போர்டிருக்கு தனியாக வந்திருக்கிறார்... விமானம் கிளம்பும் அரை மணி நேரத்திற்கு முன்பு அந்த போலி ஏஜென்ட் டிக்கெட்டையும் விசாவையும் கொடுத்து விட்டு
சென்றிருக்கிறார்... எட்டாவது மட்டமே படித்த அவருக்கு அந்த விசாவை பற்றி தெரியவில்லை.. அது துபாயில் இரு மாதம் தங்கக்கூடிய டூரிஸ்ட் விசா என்று...

பின்பு ஷார்ஜா ஏர் போர்ட்டில் ஒரு நபர் அவரை தொடர்பு கொண்டு அவரை அஜ்மான் (இது ஒரு எமிரேட்ஸ்) என்கிற இடத்தில் 12 நபர்கள் தங்கிய அறையில் 13வாது நபராக இவரையும் தங்க வைத்துள்ளனர்...
பின்பு மூன்று நாட்கள் கழித்து ஒரு மதுபான விடுதியில் பாத்திரம் கழுவும் வேலைக்கு கூட்டி சென்றுள்ளனர் அதுவும் இவரின் பல கெஞ்சல்களுக்கு பின்பு... அங்கே 15 மணி நேர வேலை... இரண்டே நாளில் அந்த வேலையை செய்ய முடியாமல் விட்டு விட்டு தங்கிய அறைக்கே திரும்பி வந்துள்ளார்... பின்பு இரண்டு மாதம் அதே அறையில் தங்கி கொண்டு வேற வேலைக்கு இவரே முயற்சி செய்துள்ளார்..

அவர்கள் பேசிய படி சாப்பாட்டையும் போடவில்லை என்பது கூடுதல் கொடுமை.. விடியற்காலை 03 மணிக்கு வருமாம் இரவு சாப்பாடு... 36 மணி நேரதிருக்கு இரு வேளை என்கிற அடிபடையில் ஒரு குப்பூஸ் ரொட்டி பாக்கெட்டும் கொஞ்சம் தாலும் தருவார்களாம்... இப்படியே இரண்டு மாத முடிவில் ஷார்ஜாவில் உள்ள நெஸ்டோ என்கிற சூப்பர் மார்க்கெட்டில் இவருக்கு மாதம் ஆயிரம் திர்ஹம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது அதுவும் இவர் சொந்த முயற்சியில்... பின்பு அதே பொலி ஏஜென்டிடம் திரும்பி போக விமான டிக்கெட் கேட்டுள்ளார்... அவர் தர மறுக்கவே, இவரே ஊரில் சொந்த பந்தகளிடம் கெஞ்சி ஒரு விமான டிக்கெட்டை எடுத்து என்னுடன் பயணம் செய்தார்... அவருடன் பேசி கொண்டிருந்த வேளையில் அவர் கடைசியாக சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதாக சொன்னார்... உடனே விமான பணி பெண்ணை அழைத்து அவருக்கு ஒரு வெஜிடபிள் பிரியாணியையும் ஒரு டீ யும் வாங்கி தந்து அவரை சாப்பிட சொன்னேன்... பின்பு சென்னை வந்தும் அவருக்கு ஊருக்கு செல்வதற்கு கூட பணம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு என்னிடம் இருந்த கொஞ்சம் இந்திய பணத்தை கொடுத்து அவரை வழிஅனுப்பினேன்..
பின்பு அவரிடம் என் சென்னை தொடர்பு என்னை கொடுத்து ஏதாவது உதவி என்றால் தொடர்பு கொள்ள சொன்னேன்...


நண்பர்களே இது திலாவர்கு மட்டும் நடந்த பரிதாபம் அல்ல.. இது மாதிரி எத்தனயோ நபர்கள் அரபு நாட்டிற்கு வேலைக்கு செல்வதா கூறி கொண்டு தவறான நபரிடம் சிக்கி பணத்தையும் சந்தோசத்தையும் தொலைத்துள்ளனர்... இது என் அருகே நடந்ததால் உங்களுக்கு இன்று தெரிகிறது... தெரியாமல் இன்னும் எத்தனையோ சோகங்கள் அரபு நாட்டில் ஒளிந்திருகின்றன...

நம்புங்கள் துபாயும், அரபு நாடுகளும் உங்களை ஏமாற்ற வில்லை... நீங்கள் தான் தவறான நபரிடம் ஏமாந்துள்ளீர்கள்....

முடிந்தவறை பகிருங்கள், உங்கள் ஊரில் படிக்காதவர்கள் யாரேனும் இந்த மாதிரி ஏஜென்டிடம் பணம் கட்டி போவதாக சொன்னால் , முக நூலில் உள்ள சில அரபு வாழ் நண்பர்கள் (tag'இல் உள்ள மற்றும் இன்னும் பல) அவர்களிடம் சோதித்து பின்பு அவர்களை வழி அனுப்புங்கள்... அரபு நாடு என்றும் உங்களை கை விடாது!!!

No comments:

Post a Comment