Thursday, August 29, 2013

திருச்செங்கோடு பெயர்க்காரணம்

திருச்செங்கோடு பெயர்க்காரணம்

திருச்செங்கோடு என்றால் அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை என்றும், செங்குத்தான மலை என்றும் பெயர். அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்ற இத்தலம் சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றுர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் திரு என்றஅடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்று அழைக்கபட்டது. ஆதிசேஷ பாம்பு மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். இப்பெயர் காலப்போக்கில் மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது.


நாமக்கல் மாவட்டதில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவா தலங்களில் மிக முக்கியமானதாக இக்கோவில் உள்ளது. இங்கு சிவனும் பார்வதியும் இரண்டற கலந்து ஒரே உருவமாய் காட்சி தருகின்றனர். இக்கோவிலில் சிவதலமும், திருமால்தலமும் ஒன்றாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

மேலும் இங்கு மூர்த்தி, தலவிருட்சம் , தீர்த்தம் ஆகியவையும் உள்ளன. இத்திருத்தலத்தில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இது சிவனின் அறுபத்திநான்கு வடிவங்களில் 22வது வடிவம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment